கோயில் கோயிலாக சுற்றும் அஜீத்!

Bookmark and Share

கோயில் கோயிலாக சுற்றும் அஜீத்!

இருதினங்களுக்கு முன்னர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத், பாலாக்காட்டில் உள்ள கோயிலுக்கு சென்று வந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவர் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் அடுத்தவாரம் வௌிவர உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக அஜீத், தனது படம் முடிந்தவுடன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி வீரம் படம் முடிந்தபோது ரிலீஸ்க்கு முன்னர், அப்படத்தின் இயக்குநர் சிவா உடன் திருப்பதிக்கு சென்று முடி காணிக்கை செலுத்தினார்.

அதேப்போல் இந்தமுறை என்னை அறிந்தால்  படம் அடுத்தவாரம் வௌிவர உள்ள நிலையில், இருதினங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு திரும்பினார்.

வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜித்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரசிகர்கள் சிலரும் அவரை சந்தித்தனர். இந்நிலையில் இன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளார் அஜீத். 

அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அஜீத் சாமி தரிசனம் முடித்த பின்னர் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions