அஜித் பெயர் சொன்னதும் சிக்கல்கள் விலகின- புது இயக்குநர் சொல்லும் சுவையான தகவல்

Bookmark and Share

அஜித் பெயர் சொன்னதும் சிக்கல்கள் விலகின- புது இயக்குநர் சொல்லும் சுவையான தகவல்

புதுமுகங்கள் நடித்திருக்கும் உனக்கென்ன வேணும் சொல்லு படத்துக்கு முதலில் டெய்சி என்று பெயர் வைத்திருந்தார்கள். அதன்பின்னர் உனக்கென்ன வேணும் சொல்லு என்று மாற்றினார்கள். அப்படி மாற்றியது எதனால் என்பதை அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்று நடைபெற்ற அப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் அவர் பேசும்போது, ‘‘இப்படம் ‘டெய்சி’ என்ற பெயரில் உருவானது. அப்போது நிறைய பிரச்சனைகளை சந்தித்தோம்.  

இப்படத்தை வெளியிட முன் வந்த ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனத்தை சேர்ந்த மகேஷ் படத்தைப் பார்த்துவிட்டு, ‘‘டெய்சி’ என்ற பெயர், இந்தக் கதைக்குப் பொருந்தவில்லை. இந்தப்பெயர்,  ஆங்கிலப் படத்தை குறிப்பது மாதிரி இருக்கிறது, படத்தில் நிறைய இடங்களில் வருகிற வசனமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்பது இந்த கதைக்குப் பொருத்தமான பெயராக இருக்கும் என்றார்.

அது மட்டுமல்லாமல் அவரும், நானும், இப்படத்தில் பணியாற்றியுள்ள பெரும்பாலானவர்கள் அஜித் சார் ரசிகர்கள்! அதனால் அஜித் படப்பாடல் வரியில் அமைந்த இந்தப்பெயர் எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது.

அதனால இந்தப்பெயரை வைத்தோம். பெயரை மாற்றி வைத்ததும் படத்திற்கு ஏற்பட்ட எல்லா தடங்கல்களும் விலகி பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இப்படத்தை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

இது ஹாரர் வகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions