மாற்றுத் திறனாளிகளுடன் தீபாவளி கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

மாற்றுத் திறனாளிகளுடன் தீபாவளி கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், புதிய துணிமணிகள் அணிந்தும் நிறைய பேர் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

சிவகாசி, கும்பகோணம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து மதுரையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளனர்.இந்த காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டாசுகள், இனிப்புகள், மதிய உணவுகள் கொடுத்துள்ளனர். மேலும், அவர்களுடன் ஆடி, பாடி அவர்களை குஷிபடுத்தவும் செய்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த உதவி பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.அஜித் தனது ரசிகர்கள் மன்றத்தை ஏற்கெனவே கலைத்துவிட்டார்.

இருப்பினும், அஜித் பெயரில் இன்னமும் அவரது ரசிகர்கள் பற்பல உதவிகள் செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions