'தல' ஸ்டைலில் 'ஆமீர் கான்'

Bookmark and Share

'தல' ஸ்டைலில் 'ஆமீர் கான்'

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் நடிக்கும் புதிய படத்தில் 'தல' அஜீத் போன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார். ஹாலிவுட்டில் ஹீரோக்கள் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிக்க தயங்குவது இல்லை.

அதிலும் ஜார்க் க்ளூனிக்கு தான் சால்ட் அன்ட் பெப்பர் லுக் அம்சமாக உள்ளது என்று பலர் கூறுகிறார்கள். கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் தங்களுக்கு வயதானாலும் டை அடித்து கருப்பு முடியுடன் நடிக்கவே விரும்புகிறார்கள்.

இந்நிலையில் தான் அஜீத் குமார் தில்லாக நரை முடியுடன் நடிக்கத் துவங்கினார். அவரது சால்ட் அன்ட் பெப்பர் அதாவது நரைமுடி கெட்டப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

பி.கே. படத்தை அடுத்து ஆமீர் தங்கால் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் அவர் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை.ஆமீர் கான் தனது சினிமா வாழ்க்கையில் முதல்முறையாக தங்கால் படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார்.

பிரபல குத்துச்சண்டை வீரர் மஹாவீர் போகத்தின் வாழ்க்கை வரலாறு தான் தங்கால் படத்தின் கதை. குத்துச்சண்டை வீராங்கனைகளான கீதா, பிபதாவின் தந்தை தான் மஹாவீர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை நாட்களாக ஆமீர் கிளீன் ஷேவ் செய்து, கருப்பு முடியுடன் தான் நடித்துள்ளார். இந்த படத்தில் நரைமுடி, ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசையுடன் அழகாக உள்ளார் ஆமீர். அஜீத்தை போன்று ஆமீருக்கும் சால்ட் அன்ட் பெப்பர் லுக் அம்சமாகவே உள்ளது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions