அஜித்துக்காக துபாயில் இடம் பார்க்கும் ஏ.எம்.ரத்னம்

Bookmark and Share

அஜித்துக்காக துபாயில் இடம் பார்க்கும் ஏ.எம்.ரத்னம்

அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும் தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் படமாக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இப்படத்திற்காக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் துபாய் மற்றும் மஸ்கட்டில் லொக்கேஷன் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு, துபாய் மற்றும் மஸ்கட்டில் இப்படத்தின் சில காட்சிகளை படமாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் வெளிவந்த ‘அசல்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களின் பெரும்பாலான காட்சிகள் துபாயில்தான் படமாக்கப்பட்டது. அந்த வரிசையில் இந்த படத்திலும் சில காட்சிகளை துபாயில் படமாக்க அஜித் மற்றும் படக்குழு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.


Post your comment





Related News
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions