அஜித்தைக் கவர்ந்த அனிருத் இசை

Bookmark and Share

அஜித்தைக் கவர்ந்த அனிருத் இசை

தற்போது அஜி்த்குமார், சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவாவின் இயக்கத்தில், தல 56 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர்.  தனுஷ் படங்கள் மற்றும் அவரது தயாரிப்பிலான படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத், கத்தி படத்தின் மூலம் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார்.  

கத்தி படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு, அனிருத்தை, அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றது.

நான் அஜித் ரசிகன் என்று மற்ற நட்சத்திரங்களை போன்று, அனிருத்தும் கூறிவந்த நிலையில், அவராலேயே நம்பமுடியாத வண்ணம், அஜித்தின் படத்திற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு வந்தது.

உடனடியாக சம்மதித்ததோடு, பின்னணி மற்றும் பாடல்களுக்கு பிரத்யேக இசை என்று அனிருத் மெனக்கெட துவங்கினார்.  தல 56 படம், தீபாவளி விருந்தாக, ரசிகர்களை மகிழ்விக்க உள்ள நிலையில், அதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  

அனிருத், இப்படத்திற்கான பாடல்களை முடித்துக்கொடுத்து விட்டார்.  அதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், அஜித்தை மிகவும் கவர்ந்துவிட்டதாம்.  அனிருத்தை நேரில் அழைத்து, அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

அஜித்தின் தல 56 படத்தின் பர்ஸ்ட் லுக்கும், ரஜினியின் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ஒரே நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   தல 56 படத்திற்கு "அடங்காதவன்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் ஒரு  தகவல் வெகுவேகமாக பரவிவருகின்றது.


Post your comment





Related News
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்
ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57?
தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்!
அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்
அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்!
ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்
சாதனை படைத்த வேதாளம் டீசர் !
அஜித் படத்திற்காக தெலுங்கு படத்தை உதறிய அனிருத்
அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தையும் பிடித்த அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions