அஜித் படத்திற்கு அனிருத் இசை உறுதியானது...!

Bookmark and Share

அஜித் படத்திற்கு அனிருத் இசை உறுதியானது...!

'3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ரஜினிகாந்தின் உறவினரான அனிருத், தொடர்ந்து பல ஹிட் படங்களில் பணி புரிந்து தற்போது தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பெற்று விட்டார்.

கடந்த ஆண்டில் விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'கத்தி' படத்திற்கு இசையமைத்தார். முதல் முறையாக ஒரு மிகப் பெரிய ஹீரோவுக்கு அனிருத் இசையமைத்தது அதுதான் முதல் முறை. அடுத்து மற்றொரு மிகப் பெரிய ஹீரோவான அஜித் நடிக்கும் படத்திற்கு தற்போது அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார்.

'வீரம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து இயக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதை அவரே ஒரு வீடியோ செய்தியாக நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.

அதில், “அஜித் சார் நடிப்பில் ரத்தினம் சார் தயாரிப்பில் சிவா சார் இயக்கத்தில் உருவாக உள்ள தல 56வது படத்தில் இசையமைக்கப் போவது, மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் பெருமையாகவும் உள்ளது.

மீண்டும் ஒரு நல்ல வருடத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி,” என அதில் அனிருத் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் அனிருத்தை தனுஷும், சிவகார்த்திகேயனும் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது மற்ற ஹீரோக்களும் அனிருத்தை அவர்களது படங்களில் இசையமைக்க ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். அனிருத், தெலுங்கிலும், ஹிந்தியிலும் கூட இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்
ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57?
தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்!
அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்
அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்!
ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்
சாதனை படைத்த வேதாளம் டீசர் !
அஜித்தைக் கவர்ந்த அனிருத் இசை
அஜித் படத்திற்காக தெலுங்கு படத்தை உதறிய அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions