அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தையும் பிடித்த அனிருத்

Bookmark and Share

அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தையும் பிடித்த அனிருத்

அனிருத் நாளுக்கு நாள் மேலே ஏறிக் கொண்டே போய்க் கொண்டேயிருக்கிறார். இன்னும் முழுதாக பத்து பத்துப் படங்கள் கூட அனிருத் இசையமைத்து முடிக்கவில்லை. அதற்குள் அவருக்கு மிகப் பெரிய வாய்ப்புகளாக வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர்தான் அஜித் படத்திற்கு இசையமைக்கப் போவதாக அனிருத் அறிவித்தார். இப்போது விக்ரம் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

விக்ரம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'பத்து எண்ணுறதுக்குள்ள' படத்தையடுத்து 'அரிமா நம்பி' படத்தையடுத்து ஆனந்த் சங்கர் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், பிரியா ஆனந்த் நாயகிகளாக நடிக்க உள்ளார்கள்.

இந்தப் படத்திற்கும் இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத் இசையில் தற்போது “ஆகோ, மாரி, நானும் ரெளடிதான்” ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது அஜித், விக்ரம் படங்களும் இணைந்துள்ளன. ஆக, இந்த ஆண்டில் இப்போதே தன்னுடைய இடத்தை அனிருத் நிரப்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 


Post your comment





Related News
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்
ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57?
தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்!
அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்
அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்!
ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்
சாதனை படைத்த வேதாளம் டீசர் !
அஜித்தைக் கவர்ந்த அனிருத் இசை
அஜித் படத்திற்காக தெலுங்கு படத்தை உதறிய அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions