அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்

Bookmark and Share

அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்

அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இப்படத்தை முடித்த பிறகு ஆபரேஷன் செய்துகொண்ட அஜித், தற்போது முழு ஓய்வு எடுத்து வருகிறார். 

ஓய்வுக்கு பிறகு மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். சிறுத்தை சிவா-அஜித் இணையும் இந்த புதிய படத்திலும் அனிருத்தே இசையமைக்கப்போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. 

‘வேதாளம்’ படத்தில் அனிருத் இசையில் அமைந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதனாலேயே இவர்கள் இணையும் புதிய படத்திற்கும் அனிருத்தை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

சமீபகாலமாக ‘பீப்’ பாடல் சர்ச்சையால் மிகவும் மன வேதனைக்குள்ளாகியிருந்த அனிருத்துக்கு, அஜித்தின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்
ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57?
தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்!
அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்!
ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்
சாதனை படைத்த வேதாளம் டீசர் !
அஜித்தைக் கவர்ந்த அனிருத் இசை
அஜித் படத்திற்காக தெலுங்கு படத்தை உதறிய அனிருத்
அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தையும் பிடித்த அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions