அஜித் படத்திற்காக தெலுங்கு படத்தை உதறிய அனிருத்

Bookmark and Share

அஜித் படத்திற்காக தெலுங்கு படத்தை உதறிய அனிருத்

இசையமைப்பாளராக அறிமுகமான குறுகிய காலத்திலேயே உலகப் புகழ் பெற்றவர் அனிருத். அவர் இசையமைத்த முதல் படமான தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும், தொடர்ந்து அவரது இசையில் வெளிவந்த படங்களின் பாடல்களும் இளம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை அதிகம் கவர்ந்து.

ஏ.ஆர்.ரகுமானே, அனிருத்தை அழைத்து 'ஐ' படத்தில் பாட வைக்கும் அளவிற்கு சிறந்த பாடகராகவும் அனிருத் மாறிவிட்டார். அதோடு கடந்த சில வருடங்களாக இருந்த இமான், யுவன் அலையையும் அப்படியே தள்ளி விட்டு விட்டார்.

தமிழில் அஜித் படத்திற்கு இசையமைப்பதற்காக தெலுங்கில் முதன் முதலாக இசையமைக்க கிடைத்த வாய்ப்பையும் அனிருத் உதறிய தகவல் இப்போது கிடைத்துள்ளது. சீனு வைட்லா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கத் தயாராக போகும் படத்திற்கு அனிருத்தைத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.

அந்தப் படத்திற்கான வேலைகள் ஆரம்பமாவதற்கு முன்பே அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு கிடைத்துவிட்டது. ஒரே சமயத்தில் இரண்டு பெரிய படங்களில் இசையமைப்பது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் தெலுங்கில் ராம்சரண் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அனிருத்தே வேண்டாமென்று சொல்லிவிட்டாராம்.

தெலுங்கில் பிரபலமாவதை விட தமிழில் முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் அனிருத்தின் ஆசையாம். அதிலும் அஜித் படத்திற்கு இசையைமக்கும் வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் கிடைத்தால் விட்டுவிட முடியுமா?. அதனால்தான் தமிழா, தெலுங்கா என்று வந்த போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.


Post your comment





Related News
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்
ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57?
தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்!
அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்
அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்!
ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்
சாதனை படைத்த வேதாளம் டீசர் !
அஜித்தைக் கவர்ந்த அனிருத் இசை
அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தையும் பிடித்த அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions