அஜித் படத்தில் அனிருத் இல்லை.?!

Bookmark and Share

அஜித் படத்தில் அனிருத் இல்லை.?!

என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அஜித் ரசிகர்கள் அடுத்து வீரம் சிவா இயக்க உள்ள படத்தினை மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர். என்னை அறிந்தால் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தாலும், அஜித் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் அப்படத்தில் காட்சிகள் இல்லை என்பதில் அவர்களுக்கு மன வருத்தம் இருக்கவே செய்கிறது.

அந்த ஏமாற்றத்துக்கு மருந்துபோடுவதுபோல் சிவா இயக்க உள்ள படத்தில் அஜித் நடிக்கும் காட்சிகள் அதிரடியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது ஒரு பக்கமிருக்க, அஜித்தை வைத்து சிவா இயக்க உள்ள படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போது கிடைத்த தகவலின்படி, சிவா இயக்க உள்ள படத்துக்கு அனிருத் இசையமைக்கவில்லையாம். ஜி. வி. பிரகாஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருவதாக சொல்லப்படுகிறது.

அவரும் சந்தோஷமாக ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தன் படத்துக்கு என்ன மாதிரியான பாடல்கள் வேண்டும்.... எப்போது பாடல் பதிவு வைத்துக் கொள்வது போன்ற விஷயங்கள் பற்றி பேசுவதற்கு அனிருத்தை அணுகியபோது அவரிடமிருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம்.

அதனால்தான் அவர் வேண்டாம் என முடிவு செய்தனராம். ஆனால் அஜித் ரசிகர்கள் அனிருத் இசையமைக்க வேண்டும் என்ற ஆசையை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.


Post your comment





Related News
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்
ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57?
தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்!
அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்
அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்!
ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்
சாதனை படைத்த வேதாளம் டீசர் !
அஜித்தைக் கவர்ந்த அனிருத் இசை
அஜித் படத்திற்காக தெலுங்கு படத்தை உதறிய அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions