படத்திற்கு படம் கேரளாவில் கூடும் அஜித்தின் மவுசு..!

Bookmark and Share

படத்திற்கு படம் கேரளாவில் கூடும் அஜித்தின் மவுசு..!

இன்றைய தினம் உலகமெங்கும் உள்ள 'தல' ரசிகர்களுக்கு கோலாகலமான திருவிழாதான். வீரம் படம் வெளியாகி ஒரு வருட இடைவெளிக்குப்பின் என்னை அறிந்தால் இன்று வெளியாகிறது.. இன்று கேரளாவின் இந்தப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலுமே முதல் காட்சியை ஒரே யூனிபார்மாக காலை 7.30 மணிக்கே ஆரம்பித்திருக்கிறார்கள்.

கேரளாவில் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள கே.ஜி.நாயர் இந்தமுறை 170 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். இதற்கு முந்தைய அஜித்தின் படங்களான மங்காத்தா (75), பில்லா-2 (1௦3), ஆரம்பம் (145), வீரம் (110) என்கிற அளவிலேயே ரிலீஸ் ஆகியிருந்தன.

 இதில் 'ஆரம்பம்' அதிக தியேட்டர்களிலும், அதன் பின் வெளியான 'வீரம்' குறைந்த தியேட்டர்களில் வெளியானதற்கு காரணம் 'வீரம்' படத்துடன் விஜய்-மோகன்லால்' காம்பினேஷனில் உருவான 'ஜில்லா'வும் அதே நாளில் வெளியானது தான்.

ஆனால் இப்போது சோலோ ரிலீஸ் என்கிற வகையில், எந்த விஷேச நாளும் இல்லாமல் 'என்னை அறிந்தால்' வெளியாகி இருப்பதால் நிறைய தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் இதற்கு முன் கேரளாவில் 'கத்தி' 200 தியேட்டர்களிலும், 'ஐ' 220 தியேட்டர்களிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
அஜித்துக்காக உடல் எடையைக் குறைக்கும் அனுஷ்கா!
மீண்டும் அஜித்துடன் இணையும் அனுஷ்கா?
வசூல் சாதனையில் என்னை அறிந்தால்!
அஜீத்தின் என்னை அறிந்தால் தமிழ்நாடு கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு
அதிகரிக்கும் \'என்னை அறிந்தால்\' திரையரங்குகள்...!
உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என்னை அறிந்தால்
தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்!
என்னை அறிந்தால் - சில ஹைலைட்ஸ்...
என்னை அறிந்தால் : ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions