அஜீத் ரெடி என்றால் நானும் ரெடி தான் - முருகதாஸ்!

Bookmark and Share

அஜீத் ரெடி என்றால் நானும் ரெடி தான் - முருகதாஸ்!

அஜீத் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து 'ரமணா', 'கஜினி', 'ஏழாம் அறிவு', 'துப்பாக்கி', 'கத்தி' போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இதில் விஜய்யுடன் இரண்டு முறையும், சூர்யாவுடன் இரண்டு முறையும் இணைந்து பணியாற்றியுள்ளார் முருகதாஸ்.

சமீபத்தில் வெளியான இவரது கத்தி படம் ரூ.100 கோடி வசூலித்தது. தற்போது கத்தி படத்திற்கு பிறகு பாலிவுட்டில், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் முருகதாஸ். இது தமிழில் வெளியான மௌன குரு படத்தின் கதை தழுவல் ஆகும்.

இந்நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் முருகதாஸ். அப்போது விஜய்யுடன் உடன் இரண்டு படங்களில் பணியாற்றிவிட்டீர்கள், அஜீத் உடன் எப்போது மீண்டும் இணையபோகிறார்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த முருகதாஸ், கதை ரெடியாகத்தான் இருக்கிறது. அஜீத் ஓ.கே. என்றால் நானும் ரெடி தான். பொதுவாக நான் ஒரு படத்தை முடித்த பின்னர் அஜீத்திடம் சென்று அடுத்தபடம் குறித்து பேசுவது உண்டு.

ஆனால் அவர் வேறு ஏதாவது படங்களில் பிஸியாக இருப்பார், சில சமயங்களில் நான் பிஸியாக இருப்பேன். இப்படியே தள்ளி போய் கொண்டே போகிறது. நிச்சயம் நாங்கள் மீண்டும் இணைந்து படம் பண்ணுவோம் என்றார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions