அஜித் பிறந்த நாளில் வெளியாகும் அருண் விஜய் படம்

Bookmark and Share

அஜித் பிறந்த நாளில் வெளியாகும் அருண் விஜய் படம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் அருண் விஜய். இப்படத்தில் அஜித் ஹீரோவாகவும் அருண் விஜய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

இப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே ‘வா டீல்’ என்னும் படத்தில் அருண் விஜய் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இதையடுத்து, அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

‘என்னை அறிந்தால்’ படம் மூலம் அஜித்தும், அருண் விஜய்யும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். இப்படம் மூலம் அருண் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். இந்த சூழ்நிலையில் அஜித் பிறந்தநாளில் ‘வா டீல்’ படம் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களை ஏப்ரல் 15ம் தேதி வெளியிடுகின்றனர். ‘வா டீல்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நடித்திருக்கிறார். வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிவஞானம் இப்படத்தை இயக்கியுள்ளார். 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions