வில்லன் நடிகர் ஆத்மாவுக்கு டிப்ஸ் கொடுத்த அஜீத்!

Bookmark and Share

வில்லன் நடிகர் ஆத்மாவுக்கு டிப்ஸ் கொடுத்த அஜீத்!

மகிழ்திருமேனி இயக்கததில் ஆர்யா நடித்த மீகாமன் படத்தில் ஒரு அதிரடியாக வில்லனாக நடித்தவர் ஆத்மா. அதையடுத்து இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தில் அதைவிட ஒரு அதிரடியான வில்லனாக நடித்திருக்கிறார்.

அதனால், இந்த படம் தனக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்று எதிர்பார்க்கிறார் ஆத்மா. இப்படத்தில் நடித்தது பற்றி அவர் மேலும் கூறும்போது, நான் 6.6 அடி உயரம் இருக்கிறேன். எனது உயரத்திற்காகவே இந்த படத்தில் வில்லன் வேடம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுவும் எனக்கு மிகவும் பிடித்தமான அஜீத் சார் படத்தில் சான்ஸ் கிடைத்ததால் அதிக உற்சாகமுடன் நடித்திருக்கிறேன். அப்படத்தில் நடித்தபோது அஜீத் சார் ரொம்ப இயல்பாக பழகினார்.

அதாவது நாம் ஸ்பாட்டில் உட்கார்ந்திருக்கும்போது அவர் வருவதைப்பார்த்து நாம் எழுந்தால், முதல்ல உட்காருங்க. உட்காருவதற்குதானே சேர் போட்டிருக்கு என்று நம்மை உட்கார வைப்பார். தான் பெரிய ஹீரோ என்கிற பந்தா அவரிடம் துளியும் கிடையாது.

அதோடு, ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடந்தபோது ப்ரீ டைமில் அஜீத்துடன் சேர்ந்து நாங்கள் கிரிக்கெட் ஆடினோம். அப்போதெல்லாம் தான ஒரு ஸ்டார் என்பதை மறந்து, சின்ன பசங்களைப்போன்று ஜாலியாக விளையாடினார் அஜீத்.

எதிரணியினர் 4 அடித்தாலும் கைதட்டி உற்சாகப்படுத்தினார். அதேபோல் கெளதம்மேனனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நிறைய இங்கிலீஷ் பேசுவார். தமிழும் பேசுவார், தனது டென்சனை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார். கண்ணாலேயே பேசுவார். அதோடு காட்சிகளை அற்புதமாக நடித்துக்காட்டுவார்.

அவர் நடிப்பதில் பாதியை நாம் வெளிப்படுத்தினாலே நடிப்பு சூப்பராக இருக்கும். அதோடு அவரது நடிப்பதைப் பார்க்கையில் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் நமக்கு ஏற்படும். புது வரவு நடிகரான எனக்கு அது பெரிய யூஸ்புல்லாக இருநதது. மேலும், எனது உயரத்துக்காகவே இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது.

என்னை பார்ப்பவர்கள் இந்த பீல்டிலேயே ஒரு வித்தியாசமான ஆளா இருக்கீங்க. உங்களை மாதிரி உயரமா யாருமே இல்லை என்று ஆச்சர்யப்படுகிறார்கள். என்னைப்பார்த்து இம்ப்ரஸ் ஆகுறாங்க. அதனால் இந்த பீல்டுல ஒரு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்போது ஜிம்முக்கு சென்று பாடியை பிட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

அதோடு, முதல் படத்தை விட இந்த படத்தில் இன்னும் சிறப்பாக நடிததிருக்கிறேன். இதற்கு காரணம் கெளதம்மேனன், அஜீத் இருவரும்தான். இதில் அஜீத் சாருடன் நடித்த காம்பினேசன் காட்சிகளில் நடித்தபோது, நிறைய டிப்ஸ் கொடுத்தார்.

நான் நடிக்கும்போது பயப்படுவது டென்சன் ஆவதை கவனிக்கும் அஜீத் சார், பயப்படாம நடிக்கணும் என்று எனக்கு தைரியம் கொடுத்தார். அதனால்தான என் நடிப்பு சிறப்பாக வந்திருக்கிறது என்று என்னை அறிந்தால் படத்தில் நடித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஆத்மா, தற்போது விஜயசேதுபதியுடன் நானும் ரெளடிதான் படத்தில் வில்லனாக நடிததுக்கொண்டிருப்பவர், அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ் என அனைவருடனும் ஒரு பெரிய ரவுண்டு வர வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.  


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions