ஒரு மணி நேரம் A.T.M கியூவில்: கொளுத்தும் வெயிலில் நின்ற ‘தல’ அஜீத்.

Bookmark and Share

ஒரு மணி நேரம் A.T.M கியூவில்: கொளுத்தும் வெயிலில் நின்ற ‘தல’ அஜீத்.

பல்கேரியாவில் படபிடிப்பில் இருந்த தல முன்னால் முதல்வர் ஜெ. இறந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.

அதன் பின் ஒருவாரம் ஓய்வெடுத்தார். மதியம்  தனது மனைவி குழந்தைகளுடன் உணவிற்காக ஸ்டார் ஹோட்டல் போனார்.

அப்போது அடையார் இந்திரா நகர் மெயின் ரோட்டில் அவரது கார் சென்றது. அங்கு ஓரிடத்தில் மக்கள் பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்றார்கள்.

அஜீத் உடனடியாக காரை ஓராமாக நிறுத்தி விட்டார். பின் தனது A.T.M கார்டை எடுத்துக் கொண்டு போய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று கொண்டார்.

கூட்டம் ஆடிப்போனது. ஒரே மகிழ்ச்சி கூட்டம் கூட ஆரம்பித்தது. போலீஸ் விரைந்து வந்து கூட்டத்தைக் கட்டுப் படுத்தியது பின்  அஜித்தை முதலில் போய் எடுத்துக் கொள்ளுங்கள் சார் என்று கூறினார்கள்.

வரிசையில் நின்றவர்களும் “போங்க தல பணம் எடுத்துட்டுப் போங்க” என்று கூற “உங்களைப் போலவே நானும் மனிதன் தானே அதோ அந்த பெரியம்மா வயசு என்ன அவங்களே நிற்கும் போது நான் நின்றால் என்ன…?

என்று   கூறி மறுத்து விட்டார். இதற்குள் ஆயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் கூடி விட்டது. போலீஸ் திணறிப் போனார்கள்.

போலீஸ் ரசிகர்களை ஒதுக்கி பாதுகாப்பு கொடுக்க 4,500 ரூபாய் எடுத்துக் கொண்டு ரசிகர்களுக்கு கைகட்டி விட்டு காரில் ஏறிச் சென்றார்.
தல தல தான்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions