ஒரு வழியாக அஜீத் ஜோடியாகும் பிந்து மாதவி?

Bookmark and Share

ஒரு வழியாக அஜீத் ஜோடியாகும் பிந்து மாதவி?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் மற்றும் பிந்து மாதவி நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. என்னை அறிந்தால் படம் ஹிட்டான சந்தோஷத்தில் அஜீத்தும், கௌதம் மேனனும் உள்ளனர்.

அஜீத் அடுத்ததாக தன்னை வைத்து வீரம் படத்தை எடுத்த சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடி யார் என்பது குறித்து தான் பரபரப்பாக பேசப்படுகிறது.

தற்போதைக்கு தல 56 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அஜீத்துக்கு 2 ஜோடிகளாம். அதில் ஒருவர் ஸ்ருதி ஹாஸன் மற்றொருவர் பிந்து மாதவி என்று கூறப்படுகிறது.சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் அஜீத்துடன் நடிக்க வேண்டும்.

எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமா நடிகர்களில் அவர் தான் மிகவும் அழகானவர் என்று பிந்து மாதவி அண்மையில் தான் தெரிவித்திருந்தார்.பிந்து மாதவி அளித்த பேட்டி வீண் போகவில்லை.

விரைவில் அவருடைய ஆசை நிறைவேற உள்ளது.அஜீத் தனது கர்ப்பிணி மனைவி ஷாலினியுடன் நேரம் செலவிட 2 மாத பிரேக் எடுத்துள்ளார். இதனால் சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 3வது வாரத்தில் துவங்க உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions