கடந்த வருடம் அப்படி, இந்த வருடம் இப்படி, அடுத்த வருடம் அஜித் பிறந்தநாளுக்கு எப்படி இருக்குமோ?

Bookmark and Share

கடந்த வருடம் அப்படி, இந்த வருடம் இப்படி, அடுத்த வருடம் அஜித் பிறந்தநாளுக்கு எப்படி இருக்குமோ?

ஒவ்வொரு வருடமும் பிரபலங்களின் பிறந்தநாள் வந்துவிட்டால் அவரது ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாடுவார்கள். நேற்று அஜித்தின் பிறந்தநாள் மிகவும் விமர்சையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அன்னதானம், மரக்கன்று கொடுப்பது, சில அஜித் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என இருந்தது.

அதோடு பல திரையரங்குகள் அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவரின் சில ஹிட் படங்களை திரையிட்டன. இப்படி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக இவ்வருடம் மொத்தம் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் அவர் படங்கள் ஓடியுள்ளது. கடந்த வருடம் 120க்கும் மேற்பட்ட திரையரங்குகள் தான் அஜித் ஸ்பெஷல் திரைப்படங்கள் திரையிடப்பட்டிருக்கிறது.

அடுத்த வருடம் எத்தனை திரையரங்குகள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions