அஜித் பிஎம்டபிள்யூ கார் செய்தி உண்மையல்ல!

Bookmark and Share

அஜித் பிஎம்டபிள்யூ கார் செய்தி உண்மையல்ல!

அஜித் சிறந்த நடிகர் மட்டுமல்ல கார் மற்றும் பைக் ரேஸ் வீரரும் கூட. அஜித் வீட்டில் விலையுர்ந்த ரேஸ் பைக்குகள் இப்போதும் உள்ளன. சமயம் கிடைக்கும்போது தனது நண்பர்களுடன் ஒரு ஜாலி ரைடு போய் வருவார்.

இந்நிலையில் நேற்று அஜித் பிஎம்டபிள்யூ ஐ 8 ஸ்போர்ட்ஸ் காரை அஜித் வாங்கியிருப்பதாகவும், ஆர்டிஓ., பதிவுக்காக அந்த கார் வடபழனி வந்ததாக போட்டோக்களுடன் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

ஆனால் இது உண்மையில்லை. இதுதொடர்பாக அஜித்தின் பத்திரிகை தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், அஜித் பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருப்பதாக வெளிவரும் செய்தி முற்றிலும் தவறானது. தயது செய்து யாரும் இதுபோன்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions