அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்

Bookmark and Share

அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்

விஸ்வாசம் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கியதில் இருந்தே அடுத்தடுத்து பல தகவல்கள் வந்த வண்ணமாக உள்ளன. படக்குழுவினர் அனைவருமே அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில், விஸ்வாசம் படக்குழுவில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக், மெர்சல் படத்தில் நடித்த குருவி பாட்டி உள்ளிட்ட பலரும் படக்குழுவில் இணைந்துள்ளனர். மேலும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் இசையமைப்பாளர் இமான், நடன இயக்குநர் அசோக் ராஜா, ஒளிப்பதிவாளர் விஜய் தீபக் உள்ளிட்ட பலரும் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதில் இமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது பாடல் காட்சி உருவாக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேநேரத்தில் எளிமையான மனிதரான அஜித், எனது இசைக்கு ஆனந்தமாக நடனமாடுவதை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவ்வாறு கூறியுள்ளார். 

சிவா இயக்கும் இந்த படத்தை சத்யோஜாதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.


Post your comment





Related News
அஜித் கூட நடிக்க வேணாம், ஆனால் இது மட்டும் வேணும் - தொகுப்பாளி டி.டி ஓபன் டாக்
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.
இத்தனை நாடுகளில் உருவாகிறதா ‘தல 57’ – ஆச்சரிய தகவல்!
விஜய், அஜித் படங்களுக்கே சவால் விட்ட தோனி!
அஜித் இடத்தை பிடித்த தனுஷ்!
அஜித் மிகச்சிறந்த மனிதர்: தனுஷ் புகழாரம்
தல ரசிகர்களோடு இணைந்து டிவிட்டரில் தெரிக்கவிடும் தனுஷ்
டைரக்டர் சிவாவை வியப்பில் ஆழ்த்திய அஜீத்
அஜீத்துடன் தீபாவளிக்கு மோதும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions