அஜீத்துடன் தீபாவளிக்கு மோதும் தனுஷ்!

Bookmark and Share

அஜீத்துடன் தீபாவளிக்கு மோதும் தனுஷ்!

அஜித் எப்போதும் தன்னுடன் வேலைபார்க்கும் அனைவரையும் ஒரே மாதிரி  நடத்துபவர். அதனால் தான் இவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்களாகவே இருக்கின்றனர்.

இவர் தற்போது சிவா இயக்கத்தில் ரத்தினம் தயாரிப்பில் நடித்து வரும் படம் தீபாவளி விருந்தாக வரவுள்ளது.  

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் விஐபி 2 (தற்காலிகத் தலைப்பு) படமும் அதே தினத்தன்று வெளிவரும் என கூறப்படுகின்றது. 

விஐபி 2 படத்தில் தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்ஸன் போன்றோர் நடித்துள்ளார். இயக்கம் - வேல்ராஜ்.

இந்த வருடம் தனுஷ் நடித்து 3 படங்கள் வெளிவந்துள்ளன. அனேகன், வை ராஜா வை, மாரி. ஹிந்தி ஷமிதாப்பையும் சேர்த்தால் 4 படங்கள். 

அஜித் படத்தின் ஓப்பனிங் அறிந்த பலரும் அந்த தேதியில் படத்தை வெளியிட தயங்குவார்கள்.  அப்படியிருக்கு தனுஷ் எப்படி இந்த முடிவை எடுத்திருப்பார் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions