அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.

Bookmark and Share

அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.

அஜித்தின் திரைப்பயணத்தில் வேறுபட்ட கதைக்களத்தில் அமைந்த படம் ஆழ்வார். இப்பட இயக்குனர் செல்லா அண்மையில் அஜித்துடன் பணிபுரிந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆழ்வார் படம் 2007ம் ஆண்டு வெளியானது, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு அது. முதன் முறை கதை சொல்லி முடித்த உடனேயே அஜித் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். 87 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது, மொத்த நாட்களும் மிகவும் சிறப்பான நாட்கள். தமிழ் மக்களுடைய ஆழ்வார் அவர்.

அவருடன் மறுபடியும் இணைந்து பிளாக் பஸ்டர் படம் கொடுக்க விரும்புகிறேன். அஜித்தை போல் ஒருவரை பார்க்கவே முடியாது. அஜித் போல் ஒரு நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions