வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க: அஜீத் ரசிகர்கள் போராட்டம்

Bookmark and Share

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க: அஜீத் ரசிகர்கள் போராட்டம்

அஜீத்துக்கு கொலை மிரட்டலும், என்னை அறிந்தால் படம் வெளியாக உள்ள தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுத்தவர்களை கைது செய்யக் கோரி அஜீத் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மர்ம ஆசாமிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். மேலும் அஜீத்துக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் தங்கள் தல படத்துடன் கூடிய பேனர்கள், போஸ்டர்களை ஆங்காங்கே வைத்து அசத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க என்று கூறி சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் கூறியிருப்பதாவது,

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த(கோழைகளை) கைது செய்!
சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு
எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு

எங்கள் தல யை தொடணும்னா....
எங்களை தாண்டி தொட்டுப் பாருங்கடா பார்ப்போம்...

இவ்வாறு அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர புதுவை உள்ளிட்ட சில இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக் கோரி அஜீத் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


Post your comment





Related News
ரசிகர்களிடம் அஜித்திற்கு பிடிக்காத விஷயம் இது தான் - அவரே சொன்ன தகவல் .!
ஆத்தாடி அஜித் நடிக்க மறுத்து மெகா ஹிட்டானது இத்தனை படங்களா?
அஜீத் பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் #HBDBelovedThalaAJITH
அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை- அதிரடி முடிவு
அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் இப்பவே கொண்டாட்டம்! என்ன செய்தார்கள் தெரியுமா
அஜித் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி?
அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!
ரசிகர்களை குழம்ப வைக்கும் அஜித்- முடிவை சொல்லுங்கள்
இதுவரை நான் அஜித் ரசிகன் இல்லை, இனிமேல் அவர் ரசிகன்? உண்மை நிகழ்வு
இலங்கையில் அஜித்துக்கு பெருகும் ரசிகர்கள் கூட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions