என்னை அறிந்தால்... பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!

Bookmark and Share

என்னை அறிந்தால்... பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலையிலேயே பல இடங்களிலும் திரையிடப்பட்டுவிட்டது. படம் பார்த்தவர்கள் பெருமளவில் படம் குறித்து நேர்மறையான கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

குறிப்பாக சமூக வலைத் தளங்களில் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ள சாதகமான விமர்சனங்கள் அஜீத் ரசிகர்களைப் பரவசமடைய வைத்துள்ளது.ஏ எம் ரத்னம் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத் - அனுஷ்கா - த்ரிஷா - விவேக் நடித்துள்ள என்னை அறிந்தால் 1600 திரையரங்குகளில் உலகெங்கும் வெளியாகியுள்ளது.

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் இந்தப் படம் வெளியானது. மேள தாளம் முழங்க, அதிரடியாக முதல் காட்சி தொடங்கியது துபாயில்.

தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் வார நாளான வியாழக் கிழமை காட்டி படத்தின் அதிகாலைக் காட்சிகளை ரத்து செய்துவிட்டனர். சென்னையில் காசி, ஜோதி, உள்ளகரம் குமரன் போன்ற அரங்குகளில் மட்டும் காலை 5 மணிக்கு சிறப்புக் காட்சி நடத்தப்பட்டது.

இங்கெல்லாம் படம் பார்த்த ரசிகர்கள், அஜீத்தின் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று கூறி கொண்டாடினர். ஆனால் சில விமர்சனங்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை குறை கூறியுள்ளனர்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions