இயக்குனர் பாசிலின் பிறந்தநாளில் அசத்திய வாரிசுகள்..!

Bookmark and Share

இயக்குனர் பாசிலின் பிறந்தநாளில் அசத்திய வாரிசுகள்..!

மலையாள இயக்குனராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குனர் பாசில் பற்றிய முன்னுரை எதுவும் சொல்லத்தேவையில்லை. தமிழில் பல படங்களை இயக்கிருந்தாலும் விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' படத்தை இயக்கியவர் மற்றும் அஜித்தின் மனைவியான ஷாலினியை சினிமாவுலகில் அறிமுகப்படுத்தியவர் என்கிற விசிட்டிங் கார்டே இன்றைய யூத்துகளுக்கு இவரை யாரென்று சொல்லிவிடும்.

நேற்று முன் தினம் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார்.  இவரது பிறந்தநாளின்போது பாசிலின் இளைய மகனும் மூத்தவரான பஹத் பாசிலின் தம்பியும் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பவரான பர்ஹான் பாசில் தனது தந்தைக்காக அசத்தலான பிறந்தநாள் கேக்கை ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வரவழைத்திருந்தார்.

இந்த கேக்கில் பாசில் இயக்கிய ஹிட் படங்களின் போஸ்டர்கள், அவருக்கு பிடித்தமான நடிகர்கள், அவருக்கு பிடித்த கேம், ஆகியவற்றை படமாக கேக்கில் பதிக்கப்பட்டிருந்தது. வாரிசுகள் அளித்த இந்த வித்தியாசமான கிப்ட்டால் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இயக்குனர் பாசில்.  


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions