அஜீத்தையும் பாட வைப்பேன்: இமான் அதிரடி

Bookmark and Share

அஜீத்தையும் பாட வைப்பேன்: இமான் அதிரடி

நடிகர் நடிகைகளை பாட வைப்பதில் கைதேர்ந்தவர் டி.இமான். பேசத் தெரிந்த நடிகர்களை பாட வைத்துவிடலாம் என்பது அவர் நம்பிக்கை. இவரைப்போலவே இப்போது எல்லா இசை அமைப்பாளர்களும் கிளம்பிவிட பவர் ஸ்டார் முதல் நான் கடவுள் ராஜேந்திரன் வரை பாடி படுத்தியெடுக்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அஜீத்தையும் பாட வைப்பேன் என்கிறார் இமான்.

அவர் கூறியிருப்பதாவது: திரைப்பட நட்சத்திரங்களை பாட வைப்பது அது படத்தின் புரமோசனுக்கு உதவுகிறது என்பது உண்மைதான். ஆனால் நான் பாட வைப்பதன் நோக்கம் அதுவல்ல.

அந்தக் காலத்தில் நடித்தவர்களே பாடியதால் அந்த கேரக்டருக்கு ஒரு தனித்தன்மை இருந்தது. பேசும் குரலும், பாடும் குரலும் ஒன்றாக இருந்தால் கேரக்டருக்கு அது பிளஸ்சாக இருக்கும். அதனால்தான் பாட வைக்கிறேன். எனது அடுத்த இலக்கு அஜீத் சாரை பாட வைப்பதுதான்.

அவர் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக அவரை பாட வைப்பேன். என்கிறார் இமான்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions