அஜீத் பேரை சொன்னாலே சும்மா அதிருதுல்ல? தயாரிப்பு நிர்வாகி இன்ப அதிர்ச்சி!

Bookmark and Share

அஜீத் பேரை சொன்னாலே சும்மா அதிருதுல்ல? தயாரிப்பு நிர்வாகி இன்ப அதிர்ச்சி!

‘நாய்கள் ஜாக்கிரதை’ பட இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் அண்மையில் ஜெயம் ரவியை சந்திக்க போயிருந்தாராம். ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் ஹீரோக்களை மட்டும் வைத்தல்ல. நல்ல கதைகளையும், அதை சொல்கிற விதத்தையும் வைத்துதான்! நா.ஜ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு தாறுமாறான ஹிட் படத்தை தர வேண்டும் என்று முடிவெடுத்திருந்த சக்தி சவுந்தர்ராஜன், ஸ்கிரிப்டுக்காக மட்டும் பல வாரங்கள் ஸ்பெஷலாக மெனக்கெட்டு இந்த கதையை உருவாக்கியிருக்கிறாராம்.

அதை சொல்வதற்காகதான் ஜெயம் ரவியின் சந்திப்பு.தயாரிப்பாளர் ரெடி. கைநிறைய காசு போடும் கம்பெனி. அதை அப்படியே ஜெயம் ரவிக்கு சொல்லாமல் சொல்லிவிட்டால், அவரும் இந்த புராஜக்டில் ஆர்வம் செலுத்துவாரே என்று கையோடு தயாரிப்பு நிர்வாகியையும் அழைத்து சென்றாராம்.

பரஸ்பர அறிமுகம் நடந்தது. அதுவரைக்கும் தனது ஆர்வத்தை பெரிய அளவில் வெளிக்காட்டிக் கொள்ளாத ஜெயம் ரவி, ஒரு விஷயத்தை கேட்டதும் படக்கென்று எழுந்தே நின்றுவிட்டாராம்.

'ஸார்' என்று சந்தோஷப்பட்டதுடன், சம்பந்தப்பட்டவரின் கையை பிடித்துக் கொண்டு ‘ஐ எம் வெரி ஹேப்பி சார்’ என்றும் கூறியிருக்கிறார்.அதென்னய்யா இது, திரைக்கதையை விட பெரிய திருப்பமா இருக்கே, என்றுதானே நினைக்கிறீர்கள்? வேறொன்றுமில்லை.

இவர்தான் நம்ம படத்துக்கு தயாரிப்பு நிர்வாகி என்று அறிமுகப்படுத்தியதும், அப்படியா? என்று கூறிவிட்டு சும்மாயிருந்துவிட்டார் ஜெயம் ரவி. அதற்கப்புறம், கதை கேட்டு முடித்திருந்தார்.

பிறகு கேஷூவலாக தயாரிப்பு நிர்வாகி பக்கம் திரும்பி, நீங்க இதுக்கு முன்னாடி என்ன படம் சார் பண்ணியிருக்கீங்க என்று இவரை பார்த்து ரவி கேட்க, ‘நான் அஜீத் சாரோட ஐந்து படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியா இருந்திருக்கேன்’ என்றாராம் இவர். அவ்வளவுதான். படக்கென எழுந்தே நின்றுவிட்டாராம் ஜெயம் ரவி.வெளியே வந்த தயாரிப்பு நிர்வாகி, ‘அஜீத் சார் பேரை சொன்னதும் எப்படி சந்தோஷப்படுகிறார் பாருங்க. அதான் அவரோட அட்ராக்ஷன்’ என்று வியந்தாராம்.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions