அஜித்தைப் பார்க்கத் துடிக்கும் பெரிய காக்கா முட்டை!

Bookmark and Share

அஜித்தைப் பார்க்கத் துடிக்கும் பெரிய காக்கா முட்டை!

மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் காக்கா முட்டை. இந்த படத்தின் பிரஸ்ஷோ நடந்தபோது பத்திரிகையாளர்கள் முன்பு தோன்றிய டைரக்டர் மணிகண்டன், விருது படம் என்றாலே போரடிக்கும் படமாக இருக்கும் என்பது நம்முடைய ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் அதை மீடியாக்கள் நினைத்தால் மாற்றலாம்.

காக்கா முட்டை படத்தை பார்க்க ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்து வருவது உங்களது விமர்சனங்களால் மட்டுமே முடியும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் படம் பார்த்த மீடியாக்களும் பலத்த கைதட்டல் கொடுத்து படத்துக்கு நல்ல விமர்சனங்களே கொடுத்தனர்.

விளைவு, தற்போது காக்கா முட்டை படத்திற்கான தியேட்டர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதோடு அந்த படத்தில் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையாக நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவரும் உலக அளவில் பிரபலமாகி விட்டனர்.

எந்தவித ஆடம்பர அரிதாரப்பூச்சும் இல்லாமல் அவர்கள் கொடுத்த இயல்பான நடிப்பு காக்கா முட்டையின் வெற்றிக்கு முக்கிய காரணமாகியிருக்கிறது. அதனால் அவர்களை இந்தியாவிலுள்ள பல பிரபலங்களும் பாராட்டி வரும்நிலையில், சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியும் பாராட்டினார்.

இப்படி அனைவருக்கும் பிடித்தமானவர்களாகி விட்ட இந்த ரமேஷ், விக்னேஷ் இருவருக்கும் பிடித்தமானவர்கள் யார் என்று கேட்டால், அஜித், தனுஷ் ஆகிய இரண்டு நடிகர்களாம்.

அதில் ரமேஷ் தனக்குப்பிடித்தமான தனுஷே காக்கா முட்டை படத்தை தயாரித்ததால் அவரை பலமுறை சந்தித்து விட்டார். ஆனால் அஜித் ரசிகரான விக்னேஷ்க்குத்தான் இன்னும் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

அவர் தனது விருப்பத்தை சிலரிடம் சொன்னதை அடுத்து அந்த சேதி அஜித்தின் காதுகளுக்கும் சென்றிருப்பதாக தெரிகிறது. ஆக, விரைவில் அஜித்தும் ரெண்டு காக்கா முட்டைகளையும் அழைத்து பாராட்டுவார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions