அஜித் படத்துக்கு ஹீரோயின் உறுதியானது!

Bookmark and Share

அஜித் படத்துக்கு ஹீரோயின் உறுதியானது!

கடந்த இரண்டு வாரங்களாக கோலிவுட்டில் ரஜினி நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்தை பற்றியும், அஜித்தின் அடுத்த படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றிய செய்திகளும்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில், அஜித்தின் அடுத்த படத்துக்கான ஹீரோயின் யார் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்தவர் காஜல் அகர்வால்தான்.

அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் ஹீரோயினாக காஜல்அகர்வால்தான் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து காஜல் அகர்வாலே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், அஜித்தின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதை உறுதி செய்தார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக அக்ஷராஹாசனும் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ‘வேதாளம்’ படத்தில் லட்சுமிமேனன் கதாபாத்திரம் போன்று அக்ஷராஹாசனின் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

தற்போது, இன்னொரு ஹீரோயினும் இப்படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த நாயகிக்கான தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions