அஜித் பிறந்த நாளில் வெளியாகும் கமல் படம்

Bookmark and Share

அஜித் பிறந்த நாளில் வெளியாகும் கமல் படம்

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் சென்சார் பணிகள் முடிவடையாததால் படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தேதி குறிப்பிடாமலேயே ஒத்திவைக்கப்பட்ட இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் தொழிலாளர்கள் தினமும், அஜித் பிறந்தநாளுமான மே 1-ந் தேதி வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தேதியில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படமும், ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘புறம்போக்கு’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.

உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், நாசர், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஊர்வசி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் அமைந்துள்ள இப்பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
தலயுடன் களமிறங்கும் கமல்ஹாசன் - வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்.!
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
வேகமெடுக்கும் விஜய், அஜித்... வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்?
நடிகர் சங்கத்துக்கும் விஜய்க்கும் அஜித்துக்கும் மோதலா? கமல் விளக்கம்!
விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு பதில் அளித்த கமல்!
அஜித்துடன் இணையும் கமல்!
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்
அமெரிக்க டாலர்களை அள்ளியது யார் ? வெளிவந்த விவரம்
கமலை இந்த முறையாவது ஜெயிப்பாரா அஜித்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions