கமலை இந்த முறையாவது ஜெயிப்பாரா அஜித்?

Bookmark and Share

கமலை இந்த முறையாவது ஜெயிப்பாரா அஜித்?

இந்த தீபாவளிக்கு, கமலின் தூங்காவனம், அஜித்தின் வேதாளம் என  இரண்டு பெரிய படங்கள்  ரிலீஸாகிரது.

அஜித் படம் கமல் படத்துடன் மோதுவது இது நான்காவது முறையாகும். முதன்முதலில் 1994ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் 2ம் தேதி நம்மவர் படம் வெளியானது அதே நாளில் அஜித்தின் பவித்ரா படம் வெளியானது.ஆனால் அஜித்தின் பவித்ரா படம் சரியாக போகவில்லை. நம்மவர் வெற்றியடைந்தது. கதையும் வெகுவான பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஆஸ்கருக்கு பரிந்துரைப்பட்டியலில் இணைந்த ஹேராம் படம் வெளியான அதே நாளில் அஜித்தின் முகவரி வெளியானது.ஆனால் முகவரி தோல்வி இல்லை என்றாலும் ஹேராம் அளவிற்கு மிகப்பெரிய வெற்றிபெறவில்லை.

அடுத்து 2002ல் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14   பம்மல் கே.சம்மந்தம் வெளியான போது அஜித்தின் ரெட் படம் வெளியானது. இதில் பம்மல் கே சம்மந்தம் காமெடி படம். அந்தப்படத்தின் வசூலுடனும், வரவேற்புடனும் ஒப்பிடுகையில் ரெட் அந்த அளவிற்குப் போகவில்லை.

இந்நிலையில் இப்போது மீண்டும் 13 வருடங்கள் கழித்து கமல் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் சந்திக்கின்றன. இதுவரை கமலுடன் மோதலில் அஜித் படங்கள் மூன்றும் பெரிதாகப் போகாத நிலையில் வேதாளம் மாற்றுமா என்று பார்ப்போம்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions