அஜித், கார்த்தி பட நாயகி மரணம்

Bookmark and Share

அஜித், கார்த்தி பட நாயகி மரணம்

அஜித் நடித்த ஆரம்பம் படத்திலும் மற்றும் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் சிறு கேரக்டரில் நடித்த நடிகை ஹானி, புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். வெங்கட்பிரபு இயக்கத்திலான பிரியாணி படத்தில் இடம்பெறும் கார் ஷோரூம் திறப்பு விழா காட்சியில் கார்த்தி ஒரு பெண்ணை சந்திப்பார்.

அவரை பார்த்த உடனேயே தனது காதல் வலையில் விழவைப்பார். மொபைல் நம்பரையும் பரிமாறிக் கொள்வார்கள். அந்த காட்சியில் நடித்த பெண்தான் ஹானி. இவர் அஜீத்தின் 'ஆரம்பம்' படத்திலும் சிறு கேரக்டரில் வந்துள்ளார். நிறைய மலேசிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் ஹானிக்கு,  புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக, கடந்த சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையி்ல், அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். ஹானி மறைவுக்கு டைரக்டர் வெங்கட்பிரபு அனுதாப செய்தி வெளியிட்டுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions