என் படத்துக்கு நானே போஸ்டர் ஒட்ட மாட்டேன், அஜித் ஓபன் டாக்

Bookmark and Share

என் படத்துக்கு நானே போஸ்டர் ஒட்ட மாட்டேன், அஜித் ஓபன் டாக்

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் தற்போது விவேகம் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பில்லா-2 படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என அனைத்து படங்களுமே வசூல் ரீதீயாக வெற்றி பெற்றது.

சில வருடங்களுக்கு முன் அஜித்தின் மார்க்கெட் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அந்த தருணத்தில் அவரை காப்பாற்றிய படம் தான் பில்லா, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஜித் நீண்ட வருடங்கள் கழித்து கலந்துக்கொண்டார்.

இதில் இவர் பேசுகையில் ‘இன்றைய நிலையில் நான் நிறைய தோல்வி படங்களை கொடுத்துள்ளேன், ஆனால், எந்த காரணத்திற்காகவும் அந்த படங்களுக்கு 100வது நாள் போஸ்டர் ஒட்டி பொய்யாக கொண்டாட மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions