தல அஜித்தை போல சால்ட் அன் பெப்பர் லுக்கிற்கு மாறிய பிரபல மலையாள நடிகர்

Bookmark and Share

தல அஜித்தை போல சால்ட் அன் பெப்பர் லுக்கிற்கு மாறிய பிரபல மலையாள நடிகர்

நடிகர் என்றால் கருநிற முடியுடன் யங்காக இருக்க வேண்டும் என்பது போய் சால்ட் அன் பெப்பர் லுக்கில் தற்போது கலக்கி வருகின்றனர் நடிகர்கள்.

முதலில் இந்த டிரண்டை கொண்டு வந்தது அஜித் என்றே சொல்லலாம். அவராலேயே இந்த சால்ட் அன் பெப்பர் லுக் பிரபலங்களிடமும் டிரண்டானது.

இந்த நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் தன்னுடைய படமான புலிமுருகன் படத்தின் வெற்றி விழாவில் சால்ட் அன் பெப்பர் லுக்கில் வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மோகன்லாலை இப்படி புது ஸ்டைலில் பார்ப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மோகன்லால் அடுத்து உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions