
அஜித் இன்று தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய எத்தனை தடைகளை தாண்டியிருக்க வேண்டும் என்பது பலரும் அறிந்ததே.
கிட்டத்தட்ட அஜித்தின் வாழ்க்கையை போலவே அவர் நடிப்பிலேயே வெளிவந்த படம் தான் முகவரி. ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பதற்காக அஜித் போராடுவது போல் இப்படத்தின் கதை அமைந்திருக்கும்.
இதில் கடைசி வரை நீ இசையமைப்பாளர் ஆகவில்லை என்றால் என்ன செய்வாய் என மணிவண்ணன் கேட்க, ‘அப்போதும் முயற்சி செய்துக்கொண்டு தான் இருப்பேன்’ என கூறுவார்.
அதேபோல் தான் அஜித் தற்போது வரை தனக்கான போராட்டத்தையும், முயற்சியையும் நிறுத்துவதாக இல்லை, இத்திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 17 வருடம் ஆகின்றது.
அஜித் திரைப்பயணத்தில் ரசிகர்களால் மட்டுமில்லை, அஜித்தாலேயே மறக்கமுடியாத படம் இந்த முகவரி, இப்படிப்பட்ட அஜித்தை பார்க்கவேண்டும் என்று தான் தற்போது ரசிகர்களும் விரும்புகின்றனர், அஜித் மீண்டும் முகவரி காலத்திற்கு திரும்புவாரா? பார்ப்போம்.
Post your comment