விரைவில் அஜித் படம் இயக்குவேன் எ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை!

Bookmark and Share

விரைவில் அஜித் படம் இயக்குவேன் எ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை!

ஒவ்வொரு படம் முடியும் போதும் அஜித் படத்தை கையில் எடுப்பேன் எனவும், விரைவில் அஜித்தை வைத்து படம் இயக்குவேன் என்று இயக்குனர் முருகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘தல’ அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது அனைத்து இயக்குனர்களின் கனவாகும். ஆனால் இயக்குனர் முருகதாஸ் தனது முதல் படத்துலேயே அந்த கனவை மெய்யாகினார்.

அஜித்தும், முருகதாஸும் இணைத்து ஹிட் அடித்த படம் தீனா. அதன் பின் இவர்கள் எப்போ இணைவார்கள் என்று ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இதற்கிடையே இளையதளபதி விஜயுடன் கூட்டணி சேர்ந்து துப்பாக்கி, கத்தி என்று இரண்டு வெற்றி படங்களை தந்தார் முருகதாஸ். தற்போது நடிகை சோனக்க்ஷி சின்காவை வைத்து “அக்கிரா” என்னும் இந்தி படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இப்படம் முடிந்தவுடன் தெலுங்கில் மகேஷ்பாபுவை இயக்கும் முருகதாஸ், அஜிதிற்காக கதை தாயராக உள்ளதாகவும், அவர் அழைத்தால் உடனே படம் இயக்குவேன் என்று சமீபத்தில் நடந்த விழாவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ விரைவில் இந்த பிரமாண்டமான கூட்டணி அமைத்தால் சந்தோஷப்படுவது தல ரசிகர்கள் மட்டுமல்ல. தமிழ் சினிமா ரசிகர்களும் தான்!


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions