மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

Bookmark and Share

மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்துக்கு ‘தல’ என்ற பட்டம் இந்த படத்திலிருந்துதான் கிடைத்தது. இதையடுத்து அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ் ஜோடி இணையவே இல்லை.

இடையில், அஜித்தும் ஏ.ஆர்.முருகதாஸும் ‘மிரட்டல்’ என்ற படத்தின் மூலம் இணையப்போவதாக செய்திகள் வந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.

இதையடுத்துதான், சூர்யாவை வைத்து ‘கஜினி’ என்ற படத்தை எடுத்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு அப்படம் அவரை புகழின் உச்சிக்கு இழுத்துச் சென்றது.

இந்நிலையில், அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால், இரண்டு பேர் தரப்பிலும் இதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தனது அதிகாரப்பூர்வமான பக்கத்தில் கண் மட்டும் தெரிவதுபோன்ற புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ள கண், ‘மிரட்டல்’ பட போஸ்டரில் உள்ள அஜித்தின் கண் என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இந்த புகைப்படத்தை தனது முகநூலில் பதிவு செய்திருப்பது அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. மீண்டும் அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் புதிய படம் உருவாகப்போகிறதா? என்ற கேள்விதான் அது. இந்த கூட்டணியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே, இந்த கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பது மட்டும் உறுதி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions