நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் அஜீத் - ஷாலினி... சூர்யா, சிவகார்த்திகேயனும் பங்கேற்பு!

Bookmark and Share

நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் அஜீத் - ஷாலினி... சூர்யா, சிவகார்த்திகேயனும் பங்கேற்பு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் அஜீத், தன் மனைவி ஷாலினியுடன் இன்று பங்கேற்றார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி, தமிழகமெங்கும் மாணவர்களும் இளைஞர்களும் பெரும் திரளாகக் கிளர்ந்து எழுந்து போராடி வருகின்றனர்.

நான்கு தினங்களாகத் தொடரும் இந்தப் போராட்டம், ஒரு வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக திரைத்துறையினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

நேற்று தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இன்று நடிகர் சங்கத்தினர் தங்கள் வளாகத்தில் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதத்துக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் முதலில் வந்தனர்.

அடுத்து நடிகர் அஜீத் தன் மனைவி ஷாலினியோடு வந்து கலந்து கொண்டார். பல்கேரியாவில் படப்பிடிப்பிலிருந்த அஜீத், நேற்றே சென்னை திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், சத்யராஜ், மோகன், மனோபாலா, நடிகர் ரகுமான் உள்ளிட்டோர் காலையிலேயே வந்து உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தனர்.

 


Post your comment





Related News
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions