நாஞ்சில் விஜயனை மிரட்டிய அஜித் ரசிகர்கள்!

Bookmark and Share

நாஞ்சில் விஜயனை மிரட்டிய அஜித் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் அது இது எது நிகழ்ச்சி இதுவரை 300 எபிசோட் வந்துள்ளது. அதில் 100 எபிசோடுகளில் நடித்திருப்பவர் நாஞ்சில் விஜயன். பெரும்பாலும் பெண் வேடங்களிலேயே நடித்து வரும் இவர், இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களை கலாய்ப்பதால் ஏகப்பட்ட மிரட்டல்கள் வருகிறது.

என்றாலும், சம்பந்தப்பட்டவர்களில் சிலர் அதை நினைத்து அப்போதைக்கு பீல் பண்ணினாலும், பலர் அதை ஜாலியாகவே எடுத்துக்கொள்கிறார்கள் என்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் மிரட்டல்கள் குறித்து அவர் தனது அனுபவத்தை கூறும்போது... விவாத மேடை என்ற பெயரில் புதிய தலைமுறையில் வரும் நிகழ்ச்சியில், நீங்க சொல்லுங்க நீங்க சொல்லுங்க என்று சொல்வார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஒரு லேடி கெட்டப்பில் நான் நடித்தேன். ஆனால் அந்த கெட்டப் பாஜகாவின் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்களைப்போலவே இருந்தது. ஆனால் நான் அவர்களை கலாய்க்க வேண்டும் என்று அந்த கெட்டப்பை போடவில்லை. நான் வைத்திருந்த விக் அவர்களை ஞாபகப்படுத்துவது போல் இருந்தது.

அதைப்பார்த்து விட்டு என்னப்பா நீ தமிழிசை செளந்தர்ராஜனை கலாய்ச்சிட்டே என்று பலரும் கேட்டனர். சிலர் மிரட்டவும் செய்தனர். அதனால் நான் ரொம்பவே பயந்து விட்டேன். அவர்களிடம் அரசியல்வாதிகளையெல்லாம் கலாய்ப்பதில்லை. நடிகர்களை ஜாலியாக கலாய்ப்பதோடு சரி என்று சொல்லி சமாளித்தேன்.

மேலும், சமீபத்தில் அஜித்தை கலாய்ச்சு ஒரு எபிசோட் பண்ணினோம். அதில், என்னம்மா இப்படி பண்றேங்களேம்மா பாணியில், அத்தாரு அத்தாரு அதுக்குப் போட்டு ஏன்டா இப்படி கத்துறே -என்று டயலாக் பேசியிருந்தோம். அதைக்கேட்டு விட்டு அவரது ரசிகர்கள் டென்சனாகி விட்டனர்.

சிலர் எப்படி எங்க தலைய இப்படி கலாய்க்கலாம் என்று மிரட்டினர். சிலர் பேஸ்புக்கில் வந்து மிரட்டினர். அதற்கு அஜித்ததானே கலாய்ச்சோம் . அவர் வந்து கேட்டா நாங்க பதில் சொல்லிக்கிறோம் என்று சொல்லி சமாளிச்சேன்.

இப்படி ஒவ்வொரு நடிகர்களை கலாய்க்கும்போது அவர்களது ரசிகர்கள் தொலைபேசியிலும், இணையதளங்களிலும் வந்து திட்டுவார்கள். மிரட்டுவார்கள். மேலும், இதுவரை நடிகர் நடிகைகளை கலாய்த்து வந்த நாங்கள், அடுத்து வரப்போகும் ஒரு எபிசோடில் மணிரத்னம், ஷங்கர், பாலா, மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் கலாய்த்துள்ளோம்.

ஆனால் இந்த எபிசோடில் டைரக்டர் பாலா மாதிரி என்னை பண்ணச்சொன்னபோது தான் மறுத்து விட்டேன் என்கிறார் நாஞ்சில் விஜயன். காரணம் கேட்டால், இந்த எபிசோடு என்னம்மா இப்படி பண்றேங்களேம்மா போன்று பெரிய அளவில் ஹிட்டாகும்.

ஆனபோதும் நான் சினிமாவிலும் நடிப்பதால் பிரச்சினையாகும் என்பதால் நடிக்க மறுத்தேன். அதேசமயம் ஒரு பெண் வேடத்தில் இந்த தொடரில் நடித்திருக்கிறேன். அதுவும் பாலாவிடம் அடிவாங்குவது போல் நடித்திருக்கிறேன்.

ஆனால் பாலா மாதிரியே ஒரு ஆளை கூட்டி வந்து நடிக்க வைத்திருக்கிறோம். இப்படி மணிரத்னம், ஷங்கர், மிஷ்கின் என ஒவ்வொருவரையும் செமையாக கலாய்த்திருக்கிறோம்.

இதற்கும் கண்டிப்பாக மிரட்டல்கள் ஜாஸ்தியாகவே இருக்கும் என்று கூறும் நாஞ்சில் விஜயன், இப்போதெல்லாம் அது இது எது நிகழ்ச்சியில் நடிக்கும் நாங்களே ஒருவரையொரு பலமாக அடித்துக்கொள்கிறோம். அதனால் சில கேரக்டர்களில் நடிக்க பயமாக உள்ளது என்கிறார்.


Post your comment

Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை சென்சார் ரிசல்ட்
விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி படம்- உறுதியான தகவல்
விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கனுமா- அப்போ ஒரு கண்டீஷன்
அரசியலுக்காக தனுஷ், விஜய் ஆண்டனியை பயன்படுத்தும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்
அண்ணாதுரை படத்தின் பின்னணி! விஜய் ஆண்டனியின் ரோல்
விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?
விஜய் ஆண்டனிக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் நடக்கின்றது!
விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்! விஜய் சேதுபதி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions