மீண்டும் இணையும் அஜித், நயன்தாரா, ஆர்யா, விஷ்ணுவர்தன்..!

Bookmark and Share

மீண்டும் இணையும் அஜித், நயன்தாரா, ஆர்யா, விஷ்ணுவர்தன்..!

அஜித், நயன்தாரா நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா மிகப்பெரிய வெற்றியடைந்தது. பில்லா படத்தின் வெற்றிக்கூட்டணி 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது.  

பில்லா அளவுக்கு ஆரம்பம் படம் வெற்றியடையவில்லை. ஆனாலும் விஷ்ணுவர்தனின் அணுகுமுறை அஜித்துக்குப் பிடிக்கும் என்பதால் அடுத்து ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார்.

அஜித் அடுத்தடுத்து படங்களில் ஒப்புக்கொண்டிருந்ததினால் விஷ்ணுவர்தன் வேறு படத்தை இயக்கப்போனார். தற்போது ஆர்யா, கிருஷ்ணா இணைந்து நடிக்கும் யட்சன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்தன்.

இப்படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் யட்சன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வெற்றிக்கூட்டணி தற்போது ஹாட்ரிக் அடிக்க இருக்கிறது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவர்களுடன் ஆர்யாவும் இந்த புதிய படத்தில் இணையவிருக்கிறார்.

அஜித், நயன்தாரா நடித்த ஆரம்பம் படத்திலும் ஆர்யா நடித்தது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions