தல” அஜித் நடிகர் சங்க தேர்தலுக்கு வராதது குறித்து விளக்கம் அளித்த நாசர்..!

Bookmark and Share

தல” அஜித் நடிகர் சங்க தேர்தலுக்கு வராதது குறித்து விளக்கம் அளித்த நாசர்..!

தென்னிந்திய நடிகர் சங்கம், இளைஞர்களின் வேகம், மூத்த நடிகர்களின் விவேகம் என புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றது.

இதே வேகத்துடன் ரஜினிகாந்தை நடிகர் சங்கத்தின் கௌரவ தலைவராகவும், கமல்ஹாசனை கௌரவ ஆலோசகராகவும் நியமிக்கலாமா? அல்லது இருவரையுமே கௌரவ ஆலோசகர்களாக நியமிக்கலாமா என்று ஆலோசனை நடத்தி வருகின்றனராம்.

இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு முதன் முதலாக பிரபல வார இதழ் ஒன்றிற்கு நாசார் பேட்டியளித்துள்ளார். அதில் அஜித், நயன்தாரா, ஹன்சிகா ஆகியோர் ஏன் வாக்களிக்க வரவில்லை என ஒரு கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்த நாசர், ‘யாரும் வாக்களிக்க வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, சந்தானம் கூட அன்று படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. இதேபோல் அவர்களுக்கு ஏதாவது வர முடியாத சூழல் இருந்திருக்கும்’ எனக் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions