அஜித்துக்கு தங்கையாகும் அதிர்ஷ்டசாலி நடிகை யார்?

Bookmark and Share

அஜித்துக்கு தங்கையாகும் அதிர்ஷ்டசாலி நடிகை யார்?

முன்னணி ஹீரோவாக இருந்தாலும் தான் நடிக்கும் படங்களின் கதை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார் அஜித். அதாவது பன்ச் டயலாக் பேசுவது அரசியல்வாதிகளை திட்டுவது போன்ற காட்சிகளை தவிர்க்கிறார்.

அதனாலோ என்னவோ அவர் என்ன மாதிரி கதைகளை விரும்புவார் என்று இயக்குநர்களுக்கே குழப்பம். கிரீடம் படத்திற்குப் பிறகு பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2 ஆரம்பம் என வரிசையாக ஆக்ஷன் படங்களில் நடித்தார்.

ஏறக்குறைய அரை டஜன் படங்களில் துப்பாக்கியும் கையுமாக இருந்த அஜித்  ஒரு மாறுதலுக்காக சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்தார். இது பக்கா சென்டிமென்ட் கதை.

வீரம் படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படமும் சென்ட்டிமென்ட் படம்தான். அஜித் போலீஸாக நடித்தாலும் குழந்தை சென்ட்டிமென்ட் தூக்கலாகவே இருந்தது.

தற்போது மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இப்படத்தில் ஆக்ஷன் இருந்தாலும் வீரம் படத்தைப்போல குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் நிறைந்திருக்கும் கதை என்ற தகவல் அடிபடுகிறது. இப்படம் தங்கச்சி சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம் என்றும் கேள்வி.  

அஜித்தின் தங்கை கேரக்டருக்காக முதலில் பிந்து மாதவியின் பெயர் அடிபட்டது. தற்போது கிடைத்த தகவலின்படி பிந்துமாதவி தங்கை கேரக்டரில் நடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்ரீதிவ்யா, நித்யா மேனன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். அனேகமாக ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் அதிகமாம்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions