அஜித் படத்தை இயக்க விரும்பும் நிவின் பாலி..!

Bookmark and Share

அஜித் படத்தை இயக்க விரும்பும் நிவின் பாலி..!

நிவின் பாலி பொறியியல் படிப்பு, படித்தாலும் அதிலும் ஏகப்பட்ட அரியர்ஸ் வைத்திருப்பவர்.. வீட்டில் அவரை தண்ணி தெளித்துவிட, சினிமா மேல் அவரது கவனம் திரும்புகிறது. அதிலும் குறிப்பாக டைரக்சன் மீது.

எப்படியாவது சென்னைக்கு வந்து கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட வேண்டும்.. அவர் மூலமாக அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்பது தான் அவரது லட்சியம்.

இதை அவரது நண்பன் அஜு வர்கீஸிடம் சொல்ல, அவரோ கௌதம் மேனன் அப்படி யாரையும் உடனே உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ள மாட்டார். ஏதாவது குறும்படம் எடுத்து, அதன் மூலம் அவரை இம்ப்ரெஸ் செய்தால் வாய்ப்பு கிடைக்கலாம் என நிவின் பாலியை தூண்டி விடுகிறார்.

எப்படியோ ஒரு குறும்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்னை வருகிறார்கள் இருவரும்.மேலே சொன்ன விஷயம் சுவராஸ்யமாக இருக்கிறதா..? உடனே நிவின் பாலிக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதா என எண்ணத்தை ஓட விடவேண்டாம்.

தற்போது நிவின் பாலி நடித்து, விரைவில் வெளியாகவுள்ள 'ஒரு வடக்கன் செல்பி' படத்தின் கதைச்சுருக்கம் தான் இது. இந்தப்படத்தை இயக்கும் பிரஜித், வினீத் சீனிவாசன் இயக்கிய, 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்', 'தட்டத்தின் மறயத்து' ஆகிய படங்களில் துணை இயக்குனராக வேலை பார்த்தவர். அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் கதையையும் வினீத் சீனிவாசன் தான் எழுதியுள்ளார்.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions