அஜீத்தை பிரமாண்டமாக வரையும் பார்வதி நாயர்!

Bookmark and Share

அஜீத்தை பிரமாண்டமாக வரையும் பார்வதி நாயர்!

'என்னை அறிந்தால்' படத்தில் அஜீத்துடன் நடித்தவர் பார்வதி நாயர். அடுத்து கமலின் 'உத்தமவில்லன்' படத்திலும் நடித்தார். இப்போது 'எங்கிட்ட மோதாதே' படத்தில் நட்ராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். 

மேலும் பார்வதிநாயர் சிறப்பாக ஓவியம் வரையும் திறமை கொண்டவர். அஜீத்தின் தீவிர ரசிகையான பார்வதி நாயர், இதை 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்த போது அஜீத்திடம் தெரிவித்தார். 

இதனால் மகிழ்ச்சி அடைந்த அஜீத் படப்பிடிப்பின்போது அவரை அழகாக புகைப்படம் எடுத்தார். அதை பிரேம் போட்டு தனது அன்பளிப்பாக பார்வதி நாயரிடம் வழங்கினார். இதனால் உள்ளம் நெகிழ்ந்த பார்வதி நாயர் அஜித்தை ஓவியமாக வரைந்து அவருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார்.

தற்போது வித்தியாசமான கோணத்தில் ஆஜித்தை பிரமாண்டமாக வரைந்து வருகிறார். இந்த ஓவியம் நிறைவு பெறும் கட்டத்தில் விரைவில் அஜீத்தை சந்தித்து ஓவியத்தை கொடுக்க பார்வதி நாயர் திட்டமிட்டுள்ளார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions