மீண்டும் ரெட் கெட்டப்பில் அஜித்

Bookmark and Share

மீண்டும் ரெட் கெட்டப்பில் அஜித்

அஜித் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளிவந்த ரெட் படம் தோல்வியடைந்தாலும், அஜித்தின் ரசிகர்கள் பலம் அதிகரிக்க இப்படம் ஒரு காரணம் என்பதை தவிர்க்க முடியாது. இப்படத்தில் அஜித் படம் முழுவதுமே மொட்டையடித்தது போலே நடித்திருப்பார். தற்போது மீண்டும் அஜித் ரெட் கெட்டப்பில் நடிக்க உள்ளாராம்.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவரும் இப்படத்தின் தலைப்பு பிரச்சனை பெரும் பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிலையில் இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் அஜித், ரெட் கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த கெட்டப் சம்மந்தமான காட்சிகள் பெரும்பாலும் ப்ளாஷ் பேக் காட்சிகளாக வரும் என கூறப்படுகின்றது.

ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் நடித்திருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்தினம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். அடுத்தடுத்து வரும் இப்படம் குறித்த தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions