அஜித் வாழ்க்கையை புரட்டிபோட்ட இரண்டு கட்டம்! ரீவைண்ட்

Bookmark and Share

அஜித் வாழ்க்கையை புரட்டிபோட்ட இரண்டு கட்டம்! ரீவைண்ட்

அஜித் சமூக வலைதளங்களில் இல்லாவிட்டாலும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை அதன் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

அவருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்ட தருணங்கள் இரண்டு. பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும் போதே படிப்பா, வாழ்க்கையா என்னும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். படிப்பு வரவிட்டாலும் படிக்கிறேன் என்ற பெயரில் நேரத்தை வீணக்காமல் அப்போதே வாழ்க்கைக்கான முடிவை எடுத்தார்.

இப்போது பலரின் அன்பை சம்பாதித்துள்ள அவர் அப்போதே நல்ல நட்பையும் சம்பாதித்தார். தொழில் கற்றுகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர்களின் ஆதரவோடு மெக்கானிக் ஷாப்பிலேயே நேரத்தை செலவழித்தார்.

சுயமாக சம்பாத்திக்க வேண்டும், சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க பைக் மோகம் அவரை தொற்றிக்கொள்ள, பந்தயத்தில் கலந்துகொள்ள பணம் வேண்டும் என்பதற்காகவே அவரின் பார்வை நடிப்பில் கண்வைத்தது. விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இது முதல் கட்டம் என்று சொல்லலாம். பின் சினிமாவை முதன்மையாக்கினார்.

அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்கும் நேரத்தில் இயக்குனர் இறந்துவிட படம் நின்றுபோனது. மனம் தளராது பிரேம புஸ்தகம், அமராவதி என படங்களை தொடர ஆசை படத்தின் பின் அடுத்த சிக்கலான கட்டம் ஆரம்பித்தது.

பைக் விபத்து, 23 ஆப்ரேசன், ஓய்வு, உடல் எடை என அவதிப்பட்டவரை இனி அவ்வளவு தான் என பலரும் பேசிவந்த நிலையில் யாரும் எதிர்பாராத படி திருப்பதி படத்தில் ஒல்லியான தோற்றதில் வந்து ஆச்சர்யப்படுத்தினார்.

இது இரண்டாம் கட்டம். பெரியளவில் அவர் பட்டப்படிப்பு படிக்காவிட்டாலும் அவரை பொறுத்தவர் அனுபவ கல்வியில் சந்தித்ததே பெரிய பாடம் தான்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions