அன்று கவுண்டமணி இன்று அஜித்: சந்தானம் பேட்டி

Bookmark and Share

அன்று கவுண்டமணி இன்று அஜித்: சந்தானம் பேட்டி

ஜெயராம் புரொடக்சன்ஸ் வழங்கும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தை சண்முகம் தயாரித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். அவர் இப்படத்தில் கேரவன் கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நாத்திகவாதியாக தோன்றுகிறார்.

மற்றொரு நாயகனாக சவுந்தர், நாயகியாக ரித்விகா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இன்று இப்படத்தின இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

விழாவில் கவுண்டமணி, நகைச்சுவை நடிகர் சந்தானம், இயக்குனர்கள் சீனு ராமசாமி, சுசீந்திரன், பேரரசு, பொன்ராம், பிரபாகர், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆரி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் சந்தான்ம் பேசும்போது, “காமெடியன்களுக்கு டிக்சனரி கவுண்டணி சார்தான். எனக்கு எதாவது ஒரு சீன் சேர்க்க வேண்டும் என்றால் யூடியூபில் கவுண்டமணி சாரின் காமெடியைப் பார்த்து தேவையானதை எடுத்து நடிப்பேன்.

இதேபோல் எல்லா காமெடியன்களும் அவரை பின்பற்றுகிறார்கள். அவருக்கு இணை யாரும் கிடையாது. இப்போது விழாவில் பேசும் அனைவரைப் பற்றியும் நகைச்சுவையாக கமென்ட் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதைக் கேட்டு எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 

அப்போதைய அஜித் குமார்தான் கவுண்டமணி சார். சினிமா நிகழ்வுகள் உள்ளிட்ட எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார். அவரைப் பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டும்தான் அவரது நடிப்பைப் பார்த்து மகிழ்ச்சியடைய முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப நகைச்சுவையாக பேசுவதில் அவருக்கு இணை அவர்தான்.

இப்படத்தின் ஹீரோவாக அவர் நடித்திருக்கிறார். டிரைலர் மிகவும் நன்றாக இருந்தது. படமும் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions