அஜீத் படத்தில் மீண்டும் சந்தானம்!

Bookmark and Share

அஜீத் படத்தில் மீண்டும் சந்தானம்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவான பிறகு காமெடி வேடங்களை தவிர்த்து விட்டு முழுநேர ஹீரோவாகி விட வேண்டும் என்பதுதான் சந்தானத்தின் எண்ணமாக இருந்தது.

ஆனால், ஹீரோவாக நடித்த முதல் படமே அவரை சறுக்கி விட்டதால், வேறு வழியில்லாமல் செலக்டிவாக சில படங்களில் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

அதோடு, அவர் முக்கிய காமெடியான நடித்த நம்பியார், வாலிபராஜா ஆகிய படங்கள் இன்னும் திரைக்கு வரமுடியாமல் கிடக்கிறது. அதேசமயம், ரஜினியுடன் நடித்த லிங்கா, ஷங்கரின் ஐ, விஷாலின் ஆம்பள ஆகிய படங்களில் வெளிவந்து சந்தானத்தின் மார்க்கெட் தக்க வைத்தன.

இந்தநிலையில், தற்போது ஒரு படத்தை தானே தயாரித்து ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம், அந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்காததோடு, அதுபற்றிய செய்திகளையும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்.

அதேசமயம் பிரபல ஹீரோக்களுடன் காமெடியனாக நடிப்பதை தொடரும் சந்தானம், வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்ததை அடுத்து இப்போது அதே சிவாவின் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திலும் முக்கிய காமெடியனாக நடிக்கிறார்.

மேலும், முந்தைய படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு பெரிதாக வேலை இல்லாதபோதும், இந்த படத்தில் அவருக்கு அதிகப்படியான காமெடி காட்சிகளை கொடுக்கிறாராம் சிவா. அதோடு, புதிய படத்தில் கிராமம், நகரம் என இரண்டுவிதமான ரோல்களில் அஜீத் நடிக்கயிருக்கும் நிலையில், எந்த அஜீத்துடன் சந்தானம் வருகிறார் என்பதை தற்போதைக்கு சஸ்பென்சாக வைத்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions