அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

Bookmark and Share

அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

தமிழ் திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு இன்று காலை 4.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.அமர்க்களம் படத்தில் காதலர்களாக நடித்த அஜித்-ஷாலினி ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து அமர்க்களமாக ஜோடி சேர்ந்தனர். கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது.

இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி, தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை அனோஷ்கா பிறந்தாள். கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து அஜித் குடும்பத்தினர், சினிமா உலகினர் மற்றும் 'தல' ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் அஜித்-ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் 'தல' ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நேரத்தில் அஜித் ரசிகர்களுடன் tamilstar.com தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கிறது. 


Post your comment





Related News
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
மனைவியுடன் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அஜித்
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
மெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா?
அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா?
பிரபல நடிகை கையை அறுத்த அஜித்- படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு ஆனால் நன்மைக்கே
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஷாலினி அஜித் பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!
அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு இன்று திருமண நாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions