ரசிகர்கள் பலம் அஜித்துக்கு இன்றும் குறையாமல் இருப்பது எப்படி?

Bookmark and Share

ரசிகர்கள் பலம் அஜித்துக்கு இன்றும் குறையாமல் இருப்பது எப்படி?

தமிழ் சினிமாவில் வெற்றி என்ற சொல் மட்டும் தான் ஒருவரின் பெயரை பல தலைமுறை கடந்து பேச வைக்கும்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோர் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர முக்கிய காரணம் அவர்கள் கொடுத்த தொடர் வெற்றிகள் தான்.

ஆனால், வாழ்வில் பல இடங்களில் பல முயற்சிகளில் தோல்வியை கண்டு இன்றும் ஒரு ரசிகரை கூட இழக்காமல், கிங் ஆப் ஓப்பனிங்காக அஜித் திகழ்வதற்கான காரணங்கள் என்ன? என்பதன் சிறப்பு தொகுப்பு தான் இந்த  பதிவு

அஜித், ஒரு பீனிக்ஸ் பறவை இவர் கொடுத்த தோல்விகளை வேறு எந்த நடிகர் கொடுத்திருந்தாலும் இன்று சினிமா என்ற வார்த்தையே அவர்கள் அகராதியில் இருந்திருக்காது, ஆனால், அஜித் இன்றும் நிலைத்து நிற்க முக்கிய காரணம் அவரின் ஆப் ஸ்கிரீன் இமேஜ் தான்.

தல எப்போதும் யாரையும் ஒருமையில் அழைக்கவே மாட்டாராம், குடும்பத்தினர், சிறியவர்கள், பெரியவர்கள், ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரையும் வாங்க, போங்க என்று தான் பேசி பழகுவாராம்.

அஜித்திற்கு படமே சரியாக ஓடவில்லை, அந்த நேரத்தில் ஏன் மன்றத்தை கலைக்க வேண்டும், இனி அஜித் கதை முடிந்தது, என பலரும் பேசிய பின் தான் அவர் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் பெரிதாகியது. முதலில் உன் குடும்பத்தை பார், பிறகு என் படம் பிடித்திருந்தால் பொழுதுபோக்கிற்காக மட்டும் பார் என ரசிகர்களை தெளிவுப்படுத்தியவர்.
தன்னை சுற்றி எப்போதும் அரசியல் சாயம் இருந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்.

மன்றத்தை கலைக்க இதுக்கூட ஒரு முக்கிய காரணம், இன்று மத்தியில் இருந்து மாநிலங்கள் வரை அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க பல கட்சிகள் காத்திருக்க, அஜித்தின் ஒரே பதில் நான் நடிகன், என் தொழில் இது மட்டுமே என்பது தான்.

அஜித் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், எந்த இடத்திலும் குடும்பத்தினர் உதவியை நாடாமல் பத்தாவதுடன் படிப்பை நிறுத்தி, கார்மெண்ட்ஸ், மாடலிங் என அவரே யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

பெண்களுக்கு பிடித்த சாக்லேட் பாய் இமேஜ், எந்த காலத்திற்கும் கைக்கொடுக்காது என்று தெரிந்து வைத்திருந்த அஜித், தைரியமாக அமர்க்களம் படத்தில் ஆக்‌ஷனில் இறங்கி வெற்றி பெற்றார். இதன் பிறகு இவர் நடித்த பல படங்கள் வெற்றி தான்.

ஆனால், 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டும் வரை அஜித் கொடுத்த வெற்றி படங்கள் எண்ணிக்கை வெறும் 4 தான். அதிலும் சினிமா விமர்சகர் ஒருவர் அஜித் திரும்பவும் கார் ரேஸிற்கே செல்வது தான் அவருக்கு நல்லது என கூறினார்.

தற்போது அவரே பல ஆங்கில தொலைக்காட்சிக்கு ‘கிங் ஆப் ஓப்பனிங்’ என்றால் அது அஜித் தான் என பேட்டியளிக்கின்றார். இது தான் ஒரு நடிகனின் வளர்ச்சி, அஜித் எப்படியும் ஜெயித்துவிடுவார் என அவர் ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் அஜித்தை இன்றும் மேலும் மேலும் ஓட வைக்கின்றது.

சினிமாவில் மட்டும் ஹீரோவாக இருந்தால் போதாது, நிஜ வாழ்க்கையிலும் அஜித் பல இளம் நடிகர்களுக்கு ரோல் மாடலாக இருக்கின்றார், தன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு வீடு கட்டி தருவது, உதவி என்று வருபவர்களுக்கு மறுக்காமல் உதவி செய்வது என பல நற்பண்புகள் தான் அஜித்தை இன்றும் முன்னணி நடிகராக திகழ வைக்கின்றது.

அஜித் பற்றிய சிறு துளிகள் :

ஒவ்வொருவரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

மனைவி ஷாலினியிடம் ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் ஐ லவ் யூ சொல்வது வழக்கம்.

அஜீத்தை.. ஷாலினி, 'பேபி' என்று தான் செல்லமாக அழைப்பார்.

நண்பர்களை தேடிச் சென்று மணிக்கணக்கில் பேசுவார்.

நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் சங்கர் அஜீத்தின் நெருங்கிய நண்பர்

தெரிந்தவர் என்றால் கைகுலுக்கி பேசுவார். மிகவும் தெரிந்தவரென்றால் தோல் மீது கைபோட்டு பேசுவார்.

துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவர். சுயபாதுகாப்புக்காக பாயிண்ட் ரக துப்பாக்கி வைத்திருக்கிறார்.

தனது உதவியாளர்கலுடன் இரவு 7 மணிக்கு மேல் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் உங்களுடன் பேசலாமா?….நேரம் கிடைக்குமா? என்ற குறுஞ்செய்தி அனுப்பி பதில் கிடைத்த பிறகே பேசுவார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சமையலறையில் காணலாம்.

அஜீத் தனிப்பட்ட சலுகை எதையும் விரும்புவதில்லை. விமான நிலையம் என்றாலும் சரி வாக்குச்சாவடியாக இருந்தாலும் சரி வரிசையில் தான் நிற்பார்

பட்டதாரி இல்லை என்றாலும் ஆங்கிலம், இந்தி, பிரெஞ் தெரியும்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions